Friday, 30 September 2011

விடுமுறை நாளொன்றில்..


அம்மாக்களின்
அடுப்படி வேலை இரட்டிப்பாகும்!

குழந்தைகளின் கூச்சலால்
தெருக்கள் நிறைக்கும்!

ரிமோட்களின் கை மாறலால்
தொலைக்காட்சிபெட்டி விசும்பும்!

பிள்ளைகளின் சப்தமின்றி
பள்ளிகள் ஏங்கும்!

தந்தைகளின் விடுமுறைகளை
சுப நிகழ்சிகள் விழுங்கும்!

எப்பொழுதும் போல் இவர்களை
திங்கள்கள் திரும்பி அழைத்துகொள்ளும்!

Sunday, 14 August 2011

சராசரி நான் !

பள்ளங்களில் இறங்கி
மேடுகளில் ஏறி
பக்குவமாய் ஒதுங்கி
சாலையில் செல்லும்
சராசரி நான் !

கால் கடுக்க நின்று
கவர்ன்மென்ட் ஆபிசில்
காந்தி நோட்டு தந்து
காரியம் முடிக்கும்
சராசரி நான் !

கார்கில் போர் ஆனாலும்
கருணா நிதி குடும்ப ஊழல் ஆனாலும்
டீக்கடை பென்ஞ்களோடு
மறந்து விடும்
சராசரி நான்!

பாலியல் கொடுமையும்
பாகுபாடு காட்டும் சாதிகளையும்
பத்திரிக்கை பார்த்து
தெரிந்து கொள்ளும்
சராசரி நான்!

என் வீட்டில்
குண்டு வெடிக்காதவரை...
என் பாக்கெட் பணம்
திருடப்படாதவரை...
பார்வையாளனகவே இருக்க
பழக்கப்பட்டவன் நான்!

அவசரமாய் செல்ல வேன்டும் நான்
அழகிய அனுஷ்காவுடன்
சுதந்திர தினம் கொண்டாட
தொலைக்காட்சி முன்!

இந்தியராய் இருப்போம்
இணைந்தே இன்னும்
பல சாதனைகள் செய்வோம்!!!
 

 

Friday, 12 August 2011

பிச்சைக்காரர்கள்

 
காத்திருக்கிறார்கள்
திருவோட்டுடன்
கோவில் வாசலிலே
பிச்சைக்காரர்கள் ...

...கருவறைக்கு சென்று
கண்டதெல்லாம் வேண்டுமென
கண் மூடி வேண்டுகின்றனர்
பக்தர்கள் ...

பிரார்த்தனைகளுக்கு
பிரதி உபகாரம் கேட்டு
ஆலயம் முழுக்க
ஆளுயரம் நிற்கிறது
உண்டியல்கள் ...

உண்மையில்
யாசிப்பது எவர் என
நானறியேன் பராபரமே !

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் :தமுஎகச கடும் கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018 பத்திரிகைச்செய்தி:8-8-2011     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்...டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத்தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தி​ல்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அருணன் ச.தமிழ்ச்செல்வன் தலைவர் பொதுச்செயலாளர்   தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தி​ல்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அருணன் ச.தமிழ்ச்செல்வன் தலைவர் பொதுச்செயலாளர்
 
இப்படிக்கு: Tamil Selvan

Friday, 5 August 2011

இறக்கமுடியாத சிலுவைகள் - வைரமுத்து

இறக்கமுடியாத சிலுவைகள்
————————–
சொன்னவள் நான் தான்!உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!
உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!
உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!
நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!…வானம் நட்ஷத்திரங்களையும்!…அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!
நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!கடல் மேல் ஒட்டகம் போகும்!காற்று மரிக்கும்!என்று சொன்னவள் நான் தான்!
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!
என்னை மன்னித்து விடுங்கள்!என்னை மறந்து விடுங்கள்!
நான் காதல் கொண்டது நிஜம்!கனவு வளர்த்தது நிஜம்!என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!
என்னை மன்னித்து விடுங்கள்!என்னை மறந்து விடுங்கள்!
காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!
இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!
காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!
எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?…
என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!
சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!
தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!
கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!
கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!
அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!
கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?…என்னை மன்னித்து விடுங்கள்!என்னை மறந்து விடுங்கள்!
ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!
இந்தியா காதலின் பூமி தான்!காதலர் பூமியல்ல!
போகிறேன்!உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!
என்னை மன்னித்து விடுங்கள்!என்னை மறந்து விடுங்கள்!